சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
கபாலி படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது தமிழ்ப் படங்கள் வெளியாகும் உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 450க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியானது. ஒரு நாள் முன்னதாக நேற்று அமெரிக்காவில் பல இடங்களில் பிரிமீயர் காட்சிகள் நடத்தப்பட்டன. அதன் மூலம் 20 லட்சம் டாலர்கள் வசூலித்துள்ளது என படத்தை அங்கு வெளியிட்டுள்ள சினி கேலக்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இன்னும் சில தியேட்டர்களின் வசூல் நிலவரம் வர வேண்டியுள்ளதாம்.
இதுவரை அமெரிக்காவில் திரையிடப்பட்ட தமிழ்ப் படங்களின் பிரிமீயர் காட்சி வசூலில் கபாலி புதிய சாதனை படைத்துள்ளது. அது மட்டுமல்ல எந்திரன் படத்தின் மொத்த அமெரிக்க வசூலையும் கபாலி படம் வெள்ளிக்கிழமை வசூலுக்குப் பிறகு முறியடிக்கும் என்கிறார்கள். அமெரிக்க ரசிகர்கள் படத்தை மிகவும் ரசித்ததாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.