நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல |
எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. உடனடியாக, திருமணம் செய்து கொள்ளப்போவதும் இல்லை. நான் எப்படி கர்ப்பமாக இருக்க முடியும், என, பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரபல நடிகை தீபிகா படுகோனேயும், நடிகர் ரன்வீர் சிங்கும் நெருக்கமான ஜோடியாக வலம் வந்தனர். இருவரும் விரைவில் திருமண செய்தியை அறிவிப்பர் என தகவல் வந்தது; பின், பிரிந்து விட்டதாகவும் செய்தி வெளியானது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், தீபிகா படுகோனே, நேற்று பேட்டியளித்தார்.
அவர் கூறியதாவது: என்னை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. நான் கர்ப்பமாக இல்லை; எனக்கு குழந்தையும் இல்லை. திருமண நிச்சயதார்த்தமும் நடக்கவில்லை; விரைவில் திருமணம் செய்யும் திட்டமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.