'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
தமிழ்த் திரையுலகமே 'கபாலி' ரிசல்ட் என்ன என எதிர்பார்த்துக் கொண்டிருக்க, தெலுங்குத் திரையுலகில் 'பாகுபலி' படத்திற்கு சீனாவில் ரிசல்ட் என்ன என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று சீனாவில் சுமார் 5000 தியேட்டர்களுக்கு மேல் 'பாகுபலி' படம் வெளியாகியுள்ளது. ஜாக்கிசான் நடித்து நேற்று சீனாவில் வெளியாகியுள்ள 'ஸ்கிப் ட்ரேஸ்' என்ற படத்துடன் 'பாகுபலி' போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.
ஜாக்கிசான் படம் வெளிவந்திருந்தாலும் அவரது படத்தை விட 'பாகுபலி' படத்திற்கு விமர்சன ரீதியாக 7.7 ரேட்டிங்கை அங்குள்ள ரசிகர்கள் கொடுத்திருக்கிறார்கள். ஜாக்கிசானின் 'ஸ்கிப் ட்ரேஸ்' படத்திற்கு 7.2 ரேட்டிங்தான் இதுவரை கிடைத்துள்ளது. இதில் மாற்றங்கள் வந்தாலும் கூட 7 ரேட்டிங்கை 'பாகுபலி' கடந்திருப்பது ஆச்சரியமான ஒன்று என அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
'பாகுபலி' படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பால் அது 'பிகே' படத்தின் வசூலை மிஞ்சுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.