கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
'தெறி, கபாலி' என இரண்டு படங்களுக்கும் இன்று முக்கியமான நாள். 'தெறி' படம் 100வது நாளைத் தொட்டுவிட்டது, 'கபாலி' படம் இன்று முதல் நாளை ஆரம்பித்துள்ளது. காலையிலிருந்தே சமூக வலைத்தளங்களில் இந்த இரண்டு படங்களைப் பற்றிய காரசார விவாதங்கள்தான் இடம் பெற்று வருகின்றன. 'கபாலி' படம் பற்றிய கருத்துக்கள் அதிகமாகப் பரவி வந்து கொண்டிருக்கிறது. 'தெறி' படம் பற்றிய பாராட்டுக் கருத்துக்கள் மற்றொரு பக்கம் பரவி வருகிறது.
இரண்டு படங்கள் சம்பந்தப்பட்டவர்கள் டிவிட்டர் டிரென்டிங்கில் அதிக இடங்களைப் பிடித்துள்ளனர். “கபாலி, சூப்பர்ஸ்டார், தலைவர், ரஜினிகாந்த், ரஜினி, ரஞ்சித், பீம்ஜி, கபாலிஎஃப்டிஎஸ்,” ஆகியவை 'கபாலி' படத்திற்கான டிரென்டிங்கிலும், “அட்லீ...ஆசம்.., தெறி 100வது நாள், கபாலி நாளில் தெறி 100வது நாள், தெறிறிறிறிறி..., நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ, தெறி, தெறி 100,” ஆகியவை தெறி படத்திற்காகவும் டிரென்டிங்கில் வந்துள்ளன. இரண்டு படங்களையும் தயாரித்த 'வி கிரியேஷன்ஸ்'-ம் டிரென்டிங்கில் வந்துள்ளது. 'கபாலி' படத்தைப் பார்த்த பதிவுகளைப் போட்ட 'சிவகார்த்திகேயன், அனிருத்' ஆகியோரும் டிரென்டிங்கில் இடம் பெற்றனர்.
இன்று ஒரு நாள் இந்த இரண்டு படங்களுமே டிரென்டிங்கை ஆக்கிரமித்துள்ளன.