தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எனக்கு தெரியாமலேயே என்னோட காட்சிகளையெல்லாம் வெட்டிட்டாங்களே... என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். தெலுங்கு முன்னணி நடிகையான காஜல் அகர்வால், பாலிவுட்டில் உருவான "சிங்கம்" படத்தில் கதாநாயகியாக நடித்தார். தமிழில் அனுஷ்கா நடித்த கேரக்டர்தான் என்றாலும், இந்தி சிங்கத்தில் காஜலுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதாக படத்தின் டைரக்டர் உறுதியாக தெரிவித்திருந்தாராம். இதனால் டைரக்டர் சொல்கிறபடியெல்லாம் உற்சாகத்துடன் நடித்துக் கொடுத்த காஜல், படம் ரிலீஸ் ஆனதும் வருத்தத்தில் இருக்கிறாராம்.
படத்தில் காஜல் வரும் பல காட்சிகள் நீக்கிவிட்டதாம். எல்லாம் எனக்கு தெரியாம போச்சு, தெரிஞ்சிருந்தா எப்படியாச்சும் டைரக்டரை சரிகட்டி என் காட்சிகளை படத்தில் இடம்பெறச் செய்திருப்பபேன் என்று கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறாராம் காஜல்.