ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மிர்ச்சி, ஸ்ரீமந்துடு போன்ற வெற்றிப் படங்களின் இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் டோலிவுட்டின் யங் டைகர் ஜூனியர் என்.டி,ஆர் இணைந்து நடித்து வரும் ஜனதா கேரேஜ் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் தற்போது மும்முரமாக நடைபெறுகின்றன.
ஐ.ஐ.டி மாணவன், மெகேனிக் என இரு வேறு கதாபாத்திரங்களில் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன் என இரு நாயகிகள் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகை தமன்னாவும் சேரவுள்ளார். தெலுங்கு திரைப்படங்களில் வரும் குத்தாட்ட வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளும் தமன்னா இம்முறை ஜூனியர் என்.டி.ஆருடன் குத்தாட்டம் போடவுள்ளார்.
மைத்திரி மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ஜனதா கேரேஜ் படத்தில் குத்தாட்டம் போட தமன்னாவிற்கு பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். கிளைமேக்ஸிற்கு முன்னதாக வரும் இப்பாடல் இப்படத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என படக்குழு கூறுகின்றது.