ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் ஆண்டுதோறும் தங்கள் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளின் கல்வி செலவுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கல்வி உதவி கேட்டு விண்ணப்பித்திருந்த 120 பேருக்கும் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
சங்க வளாகத்தில் நேற்று நடந்த எளிய விழாவில் சங்கத்தின் தலைவர் விக்ரமன் இதனை வழங்கினார். நிகழ்ச்சியில் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி, சங்க நிர்வாகிகள் ஆர்.கே.கண்ணன், ரமேஷ் கண்ணா, டி.கே.சண்முகசுந்தரம், ராஜா கார்த்திக், திருமலை, ஏகாம்பவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு எஸ்.ஆர்.எம் பல்கலைக கழக கல்லூரிகள், டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைகழக கல்லூரிகள், சத்யபாமா பல்கலைகழக கல்லூரிகளிலும் சங்க உறுப்பினர்களின் மகன், மகள்களுக்கு இலவச இடம் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.