Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் திலகத்தை மறந்த நடிகர்கள்

22 ஜூலை, 2016 - 14:02 IST
எழுத்தின் அளவு:
Actors-forget-Sivajiganesan

தமிழ் சினிமாவின் மகத்தான கலைஞன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் தனது நடிப்பையும், மூச்சையும் நிறுத்தி நேற்றோடு 15 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவரை நினைத்து பார்க்கத்தான் ஆளில்லை. வழக்கம்போல அவரது குடும்பத்தினர் அன்னை இல்லத்தில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மற்ற நடிகர்களும், ரசிகர்களும் கபாலி ஜுரத்தில் மூழ்கி கிடந்தார்கள்.


சென்னை கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலைக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணை தலைவர் பொன் வண்ணனும், செயற்குழு உறுப்பினர் அஜய்ரத்தினமும் மேலும் இரண்டு பேருடன் 'திரண்டு' சென்று மலர் மாலை அணிவித்து அந்த மகத்தான கலைஞனுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.


“கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்றுவதில் அரசு அக்கறை காட்டிவருகிறது. அவருக்கு மணிமண்டபம் கட்ட இடம் ஒதுக்கி 10 வருடங்கள் ஆகியும் அதனை கட்ட தென்னிந்திய நடிகர் சங்கமும் ஆர்வம் காட்டவில்லை. காலத்தால் அழிக்க முடியாத கலைஞனுக்கு காலம் தரும் மரியாதை இதுதான்” என்று வருந்துகிறான் அவரது ரசிகன்.


Advertisement
அதிகாலை 2 மணிக்கே 'கபாலி'யை தரிசிக்க காத்திருந்த ஜெயராம்..!அதிகாலை 2 மணிக்கே 'கபாலி'யை ... பிளாஷ்பேக்: மோகன் எப்படி 'லூஸ்' மோகன் ஆனார்? பிளாஷ்பேக்: மோகன் எப்படி 'லூஸ்' ...


வாசகர் கருத்து (7)

bal - chennai,இந்தியா
15 ஜூலை, 2018 - 14:50 Report Abuse
bal எல்லோரும் கட்சி ஆரம்பித்துவிட்டதால் மறப்பது சகஜம். ஏனெனில் சிவாஜி சார் எப்போ எல்லாம் கட்சி (காங்கிரஸ்) பேர் பேசினாலோ அப்போ எல்லாம் படு தோல்வி...அதன் பயம் வந்து விட்டது....
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
10 ஜூலை, 2018 - 20:07 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மணிமண்டபத்தை அரசோ, இல்லை நடிகர் சங்கமோ கட்டவேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறார்கள் சிவாஜி குடும்பத்தார்? அவர் சொத்தே சேர்க்கவில்லையா? அவரை ஏன் செத்த பிறகு பிச்சை எடுக்க வைக்கிறார்கள் என்று தான் தெரியவில்லை. சிம்மக்குரலோனை இப்படியா சாய்க்கவேண்டும்?
Rate this:
kalyanasundaram - ottawa,கனடா
10 ஜூலை, 2018 - 18:03 Report Abuse
kalyanasundaram HE WAS ONE OF THE GREATEST ACTOR OF THE WORLD. NONE CAN COMPETE WITH HIM IN ACTING AS WELL BRING THE REAL CHARACTERS LIFE IN TO FILM. HE SPOILT HIS FAME BY ENTERING IN TO POLITICS THAT TOO CONGRESS. STILL HE IS WELL REMEMBERED BY MOSOLD GENERATION PEOPLE.
Rate this:
Ravi Raamabadran - Chennai,இந்தியா
06 செப், 2016 - 14:39 Report Abuse
Ravi Raamabadran உண்மை தான். சிவாஜி என்னும் கலைஞன் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்பவர். இன்னும் சிவாஜி அவர்களின் படங்கள் தொலைக்காட்சியில் வரும் பொது அதற்கு கிடைக்கும் வரவேற்பு வேறு தான். சிவாஜியை இன்றுள்ள நடிகர்கள் மறக்கலாம் ஆனால் மக்கள் அவரை மறக்க மாட்டார்கள். வீரபாண்டிய கட்டபொம்மனை சிவாஜி முகத்தை தான் நினைப்பார்கள். சிவாஜி என்னும் கலைஞன் மக்கள் மனதில் இருந்து மறைய மாட்டார். இது உறுதி.
Rate this:
V.K.Mohan - SIVAKASI,இந்தியா
02 ஆக, 2016 - 13:28 Report Abuse
V.K.Mohan இன்னைக்கு முளைச்ச சின்ன பசங்க நடிகர்களும், அவங்க ரசிகர்களும் வேணும்னா நடிகர் திலகத்தை மறக்கலாம். ஆனால் எங்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் கலை தெய்வத்திற்கு என்றுமே மரணமில்லை. ஓரிரு படங்களுடன் காணாமல் போகும் நடிகர்கள் மத்தியில் 50 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் எண்கள் நடிகர் திலகம் ஒரு சகாப்தம் தான், அதற்கு சென்ற வருடம் ரிலீஸ் ஆனா 'கர்ணன்' திரைப்படமே சாட்சி... கலை உலகம் வாழும் வரை சிவாஜியின் புகழ் இருக்கும்.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Chekka Chivantha Vaanam
  Tamil New Film 96
  • 96
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : த்ரிஷா
  • இயக்குனர் :பிரேம்குமார்
  Tamil New Film MGR
  Tamil New Film Kalavani Mappillai
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in