டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வேலை வெட்டி இல்லாமல் ஊரைசுற்றிக்கொண்டுதிரியும் பையனாக தொடர்ந்து நடித்து விட்டார் சிவகார்த்திகேயன். ஆனால் அப்படி அவர் நடித்த படங்கள் எல்லாமே வெற்றி பெற்றும் வந்திருக்கிறது. அந்த வகையில், காதலுக்கு இணையாக காமெடி காட்சிகளையும் கலந்து கொடுத்து வந்த சிவகார்த்திகேயன், தொடர்ந்து ஒரே மாதிரியாக நடித்தால், இவர் படம் இப்படித்தான் இருக்கும் என்று ரசிகர்கள் ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள் என்பதால், ரெமோ படத்தில் இருந்து தனது புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துகிறார். அதனால் முதல் முறையாக இந்த படத்திற்காக அவர் கடினமான உழைப்பை கொடுத்துள்ளார்.
குறிப்பாக, பெண் வேடத்தில் நடிப்பது என்பது சாதாரணமான விசயமல்ல. பாடி ாங்குவேஜ், நடை உடை பாவணை என அனைத்தும் மாற வேண்டும். அப்போதுதான் அந்த கதாபாத்திரம் முழுமை பெறும். இதற்கு முன்பு அவ்வை சண்முகியில் கமலும், ஆணழகன் படத்தில் பிரசாந்தும் அப்படி நடித்திருந்தனர். அவர்களைத் தொடர்ந்து, இந்த ரெமோ படத்தில் தான் நடித்துள்ள நர்ஸ் வேடத்துக்காக சிவகார்த்திகேயனும் நிஜ பெண்ணாகவே தன்னை மாற்றி நடித்திருக்கிறார். அதோடு, மிமிக்ரி பேசும் திறன் கொண்டவர் என்பதால், அந்த வேடத்துக்கு தானே பெண் குரலிலும் டப்பிங் பேசியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இப்படி அடுத்த லெவலுக்கு செல்வதற்காக ரெமோ படத்தில் மாறுபட்ட கதைக்களத்தில் பயணித்திருக்கும் சிவகார்த்திகேயன், நர்ஸ் வேடத்துக்காக கிட்டத்தட்ட 8 மாதங்கள் வரை மெனக்கெட்டுள்ளார். ஆனால் அப்படி மாறி நடித்தவருக்கு இப்போதும் அந்த வேடத்தின் சாயல் அவரை ஒட்டிக்கொண் டுள்ளதாம். சில நேரங்களில் அந்த வேடத்திற்காக பேசியது போல் பேசுவது. நடப்பது என்று அந்த பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளாமல் இருக்கிறாராம் சிவகார்த்திகேயன்