ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கபாலி படம் நாளை(ஜூலை 22-ம் தேதி) ரிலீஸாக உள்ள நிலையில், மலேசியாவில் முதல் பிரீமியர் ஷோ திரையிடப்பட்டுள்ளது. கபாலி பீவர், கபாலி போபியா... என இன்னும் என்னென்ன வார்த்தைகள் இருக்கிறதோ இது எல்லாம் கபாலிக்கு சேர்த்து கொள்ளலாம், அந்தளவுக்கு உலகம் முழுக்க கபாலி கொண்டாட்டம் ஆர்பரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் கபாலி படத்தின் முதல் பிரீமியர் ஷோ, மலேசியாவில் சற்று முன்னர், இந்திய நேரப்படி சுமார் 6.30 மணியளவில் திரையிடப்பட்டது. இதை ரசிகர்கள் அனைவரும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். மலேசிய ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்களான இயக்குநர் ராஜேஷ், தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் சிவா உள்ளிட்டவர்களும் கபாலி படத்தின் முதல் பிரீமியர் ஷோவை மலசேியாவில் கண்டு ரசித்துள்ளனர். மலேசியாவை தொடர்ந்து சிங்கப்பூரில் பிரிமீயர் ஷோ ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து அப்படியே பல்வேறு நாடுகளிலும் கபாலி படம் வெளியாக இருக்கிறது. நாளை இந்தியாவில் கபாலி வெளியாகிறது.