பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நடித்து நாளை(ஜூலை 22-ம் தேதி) வெளியாக இருக்கும் படம் கபாலி. தமிழகம் தாண்டி, இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுக்க கபாலி கொண்டாட்டம் களைகட்டியிருக்கிறது. தமிழகத்தை விட பிறமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கபாலி கொண்டாட்டம் அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக பெங்களூரில் கபாலி கொண்டாட்டம் கரை புரண்டு ஓடுகிறது. நாளை படம் வெளியாகும் என்று இன்று அதிகமாக இருக்க போகிறது.
கபாலி படம் பெங்களூர் உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தில் சுமார் 200 தியேட்டர்களில் ரிலீஸாகிறது. இப்படத்தை முதலில் ராக்லைன் வெங்கடேஷ் வாங்கி வெளியிட இருந்தார். பின்னர் அது கோகுல்ராஜ் பிலிம்ஸ்க்கு போய் இறுதியில் 7 ஜோன் என்ற நிறுவனம் கபாலி படத்தை வெளியிடுகிறது.
படத்தை ரசிகர்கள் ஆவலுடன் வரவேற்க தொடங்கிவிட்டனர். படம் வெளியாகும் நாளை சுமார் 101 ஆட்டோக்களில் பெங்களூர் நகர் முழுவதும் ஊர்வலம் நடத்த உள்ளனர். இதுதவிர 50 லட்சத்திற்கு மலர் அலங்காரம், ரஜினிக்கு பூப்பலக்கு, இன்னும் சில இடங்களில் ரஜினிக்கு சிலை... தியேட்டர்களில் கபாலி டிஜிட்டல் பேனர், ஆள் உயர கட்-அவுட், தோரணங்கள்... என கொண்டாட தயாராகிவிட்டனர்.
பெங்களூரில் உள்ள ரசிகர்கள் கூறுகையில், ‛‛கபாலி படத்தை உலகளவில் வெற்றி பெற செய்ய உள்ளோம். இதை கபாலி படமாக கொண்டாடவில்லை, கபாலி பண்டிகையாக கொண்டுகிறோம் என்கின்றனர்.