பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி படம் நாளை வெளிவருகிறது. பிரபல லஹரி மியூசிக் நிறுவனம் 5 நட்சத்திர ஓட்டல்களில் கபாலியை திரையிட ஏற்பாடு செய்தது. இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன. டிக்கெட்டுகளின் விலை 1300 ரூபாயிலிருந்து 1500 ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி ஒரு சாதனையாகவே பார்க்கப்பட்டது. ஆனால் ஹோட்டல்களில் கபாலி படத்தை திரையிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, தியேட்டர்கள் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கபாலி படத்தை நட்சத்திர ஓட்டல்களில் திரையிடுவது கர்நாடக திரைப்பட வழிமுறை சட்டடத்தின்படி குற்றமாகும். மேலும் உரிய அனுமதி பெறவில்லை, இப்படி செய்வதால் எங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து கபாலி படத்தை ஹோட்டலில் திரையிடும் திட்டம் கைவிடப்பட்டது. மேலும் இதற்காக புக்கிங் செய்த அனைவருக்கும் மீண்டும் பணத்தை திருப்பி தர ஏற்பாடுகள் நடந்துள்ளன.