டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட் திரையுலகில் முன்னணியில் இருக்கும் ஹீரோக்களில் அமீர்கானும் ஒருவர். இவர், தற்போது இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‛டங்கல்' படத்தில் நடித்து வருகிறார். அமீர்கான், இப்படத்தில் மல்யுத்த வீரராக போகத்தின் வாழ்க்கை வரலாற்று கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்காக தனது உடல் எடையை குறைத்து, அதிகரித்து நடித்திருக்கிறார் அமீர்கான். இப்படத்தில், அமீர்கான் ஒரு பாடல் பாடுகிறார். பாட்டு பாடுவதற்கு முன்பாக இசையமைப்பாளர் பிரீதம் மற்றும் பாடலாசிரியர் அமிதாப் பட்டாச்சாரியா ஆகியோருடன் முறைப்படி ஒத்திகையில் ஈடுபட்டு பாட்டு பாடியிருக்கிறார். அமீர்கான் பாடல் பாடுவது இது முதன்முறையல்ல, ஏற்கனவே குலாம் என்ற படத்தில் அவர் பாடியிருக்கிறார். டங்கல் படம் 2016, டிசம்பர் மாதம் 23ம் தேதி வெளியாகயிருக்கிறது.