ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ்த் திரையுலகில் எப்படி ரஜினிகாந்தோ, அப்படி தெலுங்குத் திரையுலகில் ஒருவர் சிரஞ்சீவி. சில வருட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்தவருக்கு நமது இன்றைய இளம் ஹீரோயின்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கு ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசை என பேட்டி கொடுக்கும் நாயகிகள், தெலுங்கு பக்கம் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க அழைத்தால் சில பல கோடிகளைக் கேட்டு அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார்களாம்.
அந்த வரிசையில் தற்போது புதிதாக சேர்ந்திருப்பவர் காஜல் அகர்வால். 2 கோடிக்கும் மேல் சம்பளம் கேட்டிருக்கிறார், அவரது சம்பளத்தைக் கேட்ட தயாரிப்பாளர் அதிர்ச்சியடைந்துவிட்டாராம். படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண்தான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் ராம்சரண் - காஜல் அகர்வால் நடித்த 'மகதீரா' படம்தான் காஜலுக்கு தெலுங்கில் மிகப் பெரிய பெயரைத் தேடித் தந்தது.
ஏற்கெனவே, நயன்தாரா 3 கோடி ரூபாய் சம்பளம் கேட்டார் என்றார்கள். அடுத்து பல நாயகிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி ஒரு மாத காலத்திற்கு மேலாகியும் இன்னும் யாரை சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க வைப்பது என தவித்து வருகிறார்களாம். இந்த விவகாரத்திற்கு விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.