பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கவிருக்கும் வாஸ்கோடகாமா எனும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே துவங்கும் என கூறப்படுகின்றது. முதல் நாள் படப்பிடிப்பின் போதே வாஸ்கோடகாமா படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு தீர்மானம் செய்துள்ளதாம்.
பிரம்மோற்சவம் எனும் கமர்ஷியல் படத்தில் தோல்வியைச் சந்தித்த மகேஷ் பாபு அப்படத்திற்கு பின்னர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் கூட்டணி அமைத்துள்ளார். சமூக அக்கறையுடன் இந்திய நீதித்துறையை மையப்படுத்திய திரைப்படமாக வாஸ்கோடமாகா உருவாகும் என இயக்குனர் ஏற்கனவே கூறியுள்ளார். மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இசையமைப்பாளர் ஹரீஷ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமக்கின்றார்.