ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுடின் பிரபல நடிகர் சல்மான் கான் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ள சுல்தான் திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்து வசூலை வாரிக் குவித்து வருகின்றது. திரைக்கு வந்து 12 நாட்களில் ரூ 500 கோடி வசூல் ஈடிய சுல்தான் திரைப்படம் விமர்சக ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.
சுல்தான் திரைப்படம் பார்த்த நடிகர் வெங்கடேஷ் தனது பாராட்டுகளை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். சுல்தான் படம் பார்த்தேன், சல்மான் அபாரமாக நடித்து அசத்தியுள்ளார் என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள வெங்கடேஷ் சல்மான் கானுடன் தான் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படத்தை அவருக்கு வெளியிட்டு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் மாருதி இயக்கத்தில் பாபு பங்காராம் படத்தில் நடித்து வரும் வெங்கடேஷ் அடுத்ததாக தமிழ் மற்றும் இந்தியில் மாதவன் நடித்து வெற்றி கண்ட இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் மாதவன் நடித்த குத்துச்சண்டை பயிற்சியாளராக தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்கவிருக்கின்றார். வெங்கடேஷ், நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள பாபு பங்காராம் ஆகஸ்ட் 12ல் திரைக்கு வரும் என கூறப்படுகின்றது.