'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
‛க' என்று வாய் திறந்தாலே கபாலி என்று மாறும் அளவுக்கு உலகம் முழுக்க ‛கபாலி போயியா' தாக்கியுள்ளது. இந்திய திரையுலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத, நிகழக்கூடாத பல அரிய நிகழ்வுகள் கபாலியால் ரஜினியின் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சைக்கிள், டூவிலர் தொடங்கி விமானம் வரை கபாலி பறந்து கொண்டிருக்கிறது. உண்ணும் உணவு முதல் நாணயம் வரை எங்கு பார்த்தாலும் கபாலி உருவமாக தெரிகிறது.
நாளை(ஜூலை 22-ம் தேதி) கபாலி படம் உலகம் முழுக்க பிரமாண்டமாய் ரிலீஸாக உள்ள நிலையில் எந்த ஒரு அலட்டலுமின்றி அமைதியாய் அமெரிக்காவில் ஓய்வு எடுத்து கொண்டிருக்கிறார் ‛கபாலி' நாயகன் ரஜினி. நாளை படம் ரிலீஸாக உள்ள நிலையில் அமெரிக்காவில் கபாலி படத்தின் சிறப்பு காட்சி ரஜினிக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்துவிட்டு மிகவும் மகிழந்து போய் இருக்கிறார் ரஜினி.
உடனடியாக அங்கிருந்தபடியே இயக்குனர் பா.ரஞ்சித்தைப் போனில் பாராட்டியுள்ளார். இதை ரஞ்சித்தும் தன் டுவிட்டர் பக்கத்தில், “மகிழ்ச்சி... சூப்பர்ஸ்டார் நிறைய முத்தங்களை” அனுப்பியுள்ளார் என நடுராத்திரியில் பதிவு செய்துள்ளார்.