டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
காலமாற்றம் திரையுலகில் எந்த அதிசயத்தையும் சாத்தியமாக்கும்.. முன்னணி நடிகர்கள் சிலருடனேயே கூட நடிக்க யோசிக்கும் நயன்தாரா, ஆரி, வைபவ் ஆகியோருடன் எல்லாம் நடிக்கவில்லையா என்ன..? அதுபோலத்தான் கதையும் தனது கதாபாத்திரமும் பிடித்துவிட்டால் ஹீரோ யார் என்கிற பேச்சை அனுஷ்காவும் எடுப்பதில்லையாம். அந்த முடிவுதான் இப்போது மலையாள நடிகர் உன்னி முகுந்தனுக்கு தெலுங்கில் உருவாக்க இருக்கும் 'பாஹ்மதி' படத்தில் அனுஷ்காவை ஜோடியாக சேர்த்துள்ளது.. அனுஷ்காவுடன் ஜோடிசேரும் முதல் மலையாள நடிகர் என்கிற பெயரையும் அவருக்கு பெற்று தந்துள்ளது..
இளம் நடிகராக அழகும் திறமையும் இருந்தாலும் மலையாளத்தில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார் உன்னி முகுந்தன்.. இந்த நேரத்தில் தான் மோகன்லால் தெலுங்கில் நடிக்கும் 'ஜனதா கேரேஜ்' படத்தில் உன்னி முகுந்தனுக்கும் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது..இதற்கு காரணமும் உண்டு.. உன்னி முகுந்தன் சண்டைக்காட்சிகளில் நன்கு பெயரெடுத்தவர். அதனால் இவரது சண்டைக்காட்சிகளின் தெலுங்கு யூடியூப் வெர்ஷன்கள் கிட்டத்தட்ட 20 லட்சம் பேரால் பார்க்கப்பட்டு இருக்கின்றன. இதுதான் 'ஜனதா கேரேஜ்' பட வாய்ப்பை இவருக்கு பெற்று தந்து. தற்போது, 'பாஹ்மதி' என்கிற படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாகவும் ஆக்கியுள்ளது. இந்தப்படத்தில் ஆதி மற்றும் ஜெயராம் இருவரும் கூட முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.