ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
செல்வராகவனை பிரிந்த சோனியா அகர்வால், மீண்டும் ஹீரோயினாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறார். 'ஒரு நடிகையின் கதை', 'பாலக்காட்டு மாதவன்' படங்களில் ஹீரோயினாக நடித்தார், சில படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடினார். ஆனாலும் அவர் நினைத்த இடத்தை பிடிக்க முடியவில்லை. தற்போது 'சாயா' என்ற படத்தில் ஐ.எப்.எஸ் அதிகாரியாக அதாவது இண்டியன் பாரஸ்ட் சர்வீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தில் சந்தோஷ், காயத்ரி, கவுதமி சவுத்ரி என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஆர்.சுந்தர்ராஜன், ஒய்.ஜி.மகேந்திரன், பாலாசிங் உள்பட பலர் நடிக்கிறார்க்ள. ஜான் பீட்டர் இசை அமைக்கிறார். எஸ்.பார்த்திபன் ஒளிப்பதிவு செய்கிறார். அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ்.சசிகலா பழனிவேல் தயாரிக்க வி.எஸ்.பழனிவேல் இயக்குகிறார். இதுவும் ஒரு பேய் படம்தான். ஆனால் பேய்கள் மக்களுக்கு நல்லது செய்கிற கதையாம். காட்டுக்குள் இருக்கும் அந்த பேய்களை கண்டுபிடிக்கும் காட்டிலாகா அதிகாரியாக சோனியா அகர்வால் நடித்து வருகிறார்.