தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் ஆண்டனி, நடித்த 'பிச்சைக்காரன்' படத்தை சசி இயக்கினார். இந்தப் படம் தமிழில் சூப்பர்ஹிட் ஆனது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் தெலுங்கில் டப் செய்து வெளியிடப்பட்டு அங்கும் ஹிட்டாகி வசூலை குவித்தது. தொடர்ந்து அங்கு ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிச்சைக்காரன் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது.
'பிச்சைக்காரன்' படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய தயாரிப்பார் யோகிஷ் துவாரகீஷ் உரிமம் பெற்றுள்ளார். விஜய் ஆண்டனி நடித்த கேரக்டரில் கிருஷ்ணா அஜய் ராவ் நடிக்கிறார். இதற்கான ஆயத்த பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அடுத்த மாதம் படப்பிடிப்புகள் தொடங்குகிறது. இந்தயிலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. விஜய் ஆண்டனி தற்போது 'சைத்தான்', 'எமன்' படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் ரீமேக் உரிமையை வாங்குவதற்கு தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி தயாரிப்பாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.