‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரின் அக்கா கரிஷ்மா கபூர். இவரும் பாலிவுட்டில் பிரபல நடிகைதான். ஆனால் கரீனா அளவிற்கு புகழ்பெறவில்லை. இவர் கடந்த 2003ம் ஆண்டு சஞ்சய் கபூர் என்ற தொழில் அதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். சட்டப்படி விவாகரத்தும் செய்து கொண்டனர்.
தற்போது கரிஷ்மா கபூர் தொழில் அதிபர் சந்தீப் தோஷ்னிவா என்ற தொழில் அதிபரை தீவிரமாக காதலித்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தனது திருமணத்திற்கு தனது குழந்தைகளை மட்டும் அழைக்க முடிவு செய்திருக்கிறாராம் கரிஷ்மா கபூர்.