பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
தெகிடி, முண்டாசுப்பட்டி படங்களுக்குப்பிறகு கவனிக்கப்பட்ட காமெடியன் காளி வெங்கட். அதையடுத்து மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தில் ரித்திகா சிங்கின் தந்தையாக சாமிக்கண்ணு என்ற வேடத்தில் நடித்து பேசப்பட்டார். அதன்காரணமாக, சமீபத்தில் வெளியான ராஜாமந்திரி படத்தில் கலையர சனுடன் இணைந்து நடித்தார். அதில் கலையரசன் ஹீரோ என்றபோதும், அவருக்கு இணையாக காளி வெங்கட்டிற்கும் கதையில் முக்கியத்துவம் இருந்தது. அதோடு காதலியை நினைத்து பாடும் ஒரு பாடலும் அவருக்கு அந்த படத்தில் கொடுத்தனர்.
அதனால் இப்போது குணசித்ரம், காமெடி என இரண்டுவிதமான வேடங்களில் கலந்து நடிக்கத் தொடங்கியிருக்கும் காளிவெங்கட், முடிந்தவரை கதைகளில் தனக்கும் பங்கு இருக்க வேண்டும் என்கிற ரீதியில் படங்களை செலக்ட் பண்ணி நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது ஜெய்யுடன் நடித்து வரும் எனக்கு வாய்த்த அடிமைகள் படத்திலும் காளிவெங்கட்டிற்கு முக்கியமான வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம். காமெடியன் கதாபாத்திரம் என்றாலும், காதலுக்கு கைகொடுப்பது. அட்வைஸ் கொடுப்பது என குணசித்ரம் கலந்த கமெடியனாக நடித்து வருகிறார் காளிவெங்கட்.