அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மெட்ராஸ், கதகளி, கணிதன் படங்களில் நடித்த கேத்ரின் தெரசா, தற்போது ஆர்யாவுடன் கடம்பன் படத்தில் பழங்குடியின பெண்ணாக நடித்துக்கொண்டி ருக்கிறார். இதற்கு முன்பு பெரும்பாலும் மாடர்ன் கேரக்டர்களிலேயே நடித்துள்ள கேத்ரின், கடம்பன் படத்தில்தான் முதன்முறையாக கரடுமுரடான காட்டுப் பகுதிகளில் புதுமையான கெட்டப்பில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதாவது அனுஷ்கா இரண்டாம் உலகப்போர் படத்திற்காக ஜார்ஜியா காட்டுப்பகுதிகளில் முகாமிட்டு நடித்ததைப் போன்று கேத்ரின் தெரசாவும் தாய்லாந்து காடுகளில் முகாமிட்டு நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், சில தெலுங்கு படங்களில் நடித்து வரும் கேத்ரின் தெரசாவுக்கு கடம்பனுக்குப் பிறகு நடிக்க தமிழில் புதிய படங்கள் புக்காகவில்லை. பேச்சுவார்த்தையில்தான் இருக்கிறார். இந்த நேரத்தில், மெட்ராஸ், கணிதன் படங்களின் வெற்றியை மனதில் கொண்டு தங்கள் படங்களில் அவரை நடிக்க வைக்க சில நடிகர்கள் முயற்சி எடுக்கின்றனர். குறிப்பாக, மார்க்கெட்டில் பின்தங்கியிருக்கும் ஸ்ரீகாந்த், விமல் உள்ளிட்ட சில ஹீரோக்கள் அவரை தாங்கள் நடிக்கும் படங்களில் நடிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள். தங்களிடம் கதை சொல்லியிருக்கும் டைரக்டர்களிடம், கேத்ரின் தெரசாவிடம் கால்சீட் கேளுங்கள் என்றும் கூறி வருகிறார்கள்.