‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
குறைந்த பட்ஜெட்டில் படங்கள் தயாரிப்போரின் செல்லப் பிள்ளை என்ற பெயரை பெற்றுள்ளார்,
கயல் ஆனந்தி. இவர் நடித்த படங்கள், இதுவரை பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், முதலுக்கு மோசமில்லை என்ற பாராட்டை பெற்றுள்ளன. அதனால், சிறிய பட்ஜெட் படங்கள், ஆனந்தியை முற்றுகையிடுகின்றன. ஒரு சில படங்கள் ஹிட் கொடுத்த நடிகையர், பல லகரங்களை சம்பளமாக கேட்பதால், ஆனந்தி பக்கம் தாவுகின்றனர் தயாரிப்பாளர்கள். படப்பிடிப்பிலும், 'எனக்கு அது வேண்டும்; இது வேண்டும்' என்ற அலட்டல், ஆடம்பரம் எதுவுமில்லை. இயக்குனர்கள் சிலர், கவர்ச்சியாக நடிக்கும்படி, கட்டாயப்படுத்துவதாக, மேடையில் பேசியதால், சில முன்னணி இயக்குனர்களின் கோபத்தை சம்பாதித்தாலும், சிறிய தயாரிப்பாளர்களின் முதல் தேர்வு ஆனந்தி தான். தற்போது, விமல், ரோபோ சங்கர் நடிக்கும் மன்னர் வகையறா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஆனந்தி.