ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'நேரம் கூடி வரும் நிலையில், காரியத்தை கெடுத்து விடுவர் போலிருக்கிறதே' என, புலம்புகிறார் சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைதான்யாவுக்கும், இவருக்கும் இடையேயான காதல் விவகாரம், பெரும் ரகசியமாக இருந்தது. ஆனால், ஊடக வெளிச்சத்தால், இவர்களின் காதல், அம்பலத்துக்கு வந்தது. கடும் எதிர்ப்பையும் முறியடித்து, நாகார்ஜுனாவின் சம்மதத்தையும் பெற்றுவிட்ட சமந்தாவுக்கு, இப்போது, தான் நடித்த சில பழைய படங்களே எதிரியாக உருவெடுத்துள்ளன. நடிக்க வந்த புதிதில், சில படங்களில் ரொம்பவும் தாராளமாக நடித்திருந்தார் சமந்தா. அந்த புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் தற்போது வெளியிடுகின்றனர். இதனால், கடுப்பாகியுள்ள சமந்தா, 'என் தொழில் எதிரிகள் தான், என் காதலை சீர்குலைக்க திட்டமிட்டு இந்த வேலையை செய்கின்றனர்' என, புலம்புகிறாராம்.