'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு திரைப்பட ரசிகர்களால், பிரின்ஸ் என, அன்புடன் அழைக்கப்படும் மகேஷ் பாபுவுடன் ஜோடியாக நடிக்க, முன்னணி நடிகையருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆனால், மகேஷ் பாபுவின் மனம் கவர்ந்த ஹீரோயின் யார் தெரியுமா? த்ரிஷாவும், அனுஷ்காவும் தானாம். இதை, அவரே, டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அனுஷ்கா என்ன நினைக்கிறாரோ தெரிய வில்லை; ஆனால், த்ரிஷா, பயங்கர உற்சாகத்தில் இருக்கிறார். மகேஷ் பாபுவுக்கு பிடித்த ஹீரோயினாக இருப்பது, எவ்வளவு சந்தோஷமான விஷயம். இனிமேல், வயதான ஹீரோயின் என, என்னை யார் விமர்சித்தாலும் கவலையில்லை என, தன் தோழியரிடம் கூறி வருகிறார் அவர்.