ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வட இந்திய நடிகைகளில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஹோம்லியான வேடங்களில் நடித்து வருபவர் கமாலினி முகர்ஜி. கமல் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் அறிமுகமான கமாலினி முகர்ஜி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'இறைவி' படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இறைவி படம் வெற்றியடைந்திருந்தால் இந்நேரம் கமாலினியை இயக்குநர்களும்.. ஹீரோக்களும் மொய்த்திருப்பார்கள். அவரது துரதிஷ்டமோ என்னவோ... இறைவி படம் அட்டர் ப்ளாப்பாகிவிட்டது. அதன் காரணமாக கமாலினிக்கு எதிர்பார்த்தஅளவுக்கு பட வரவுகள் வரவில்லை.
மார்க்கெட் இழந்து தற்போது சும்மா இருக்கும் காமெடி நடிகர் ஒருவர் தற்போது 'துப்பறியும் சங்கர்' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஏற்கனவே ஹீரோவாக நடித்த எந்தப்படமும் ஓடவில்லை. இரண்டு படங்கள் இன்னும் வெளிவரவே இல்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் அந்த காமெடியன். அவருக்கு ஜோடியாகத்தான் தற்போது கமாலினியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.