ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'கபாலி' படத்தின் பிரிமீயர் காட்சி பிரான்ஸில் உள்ள புகழ் பெற்ற ரெக்ஸ் சினிமாஸ் திரையரங்கில் திரையிடப்பட உள்ளது. 21ம் தேதி நாளை நடைபெற உள்ள பிரிமீயர் காட்சி டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு முடிந்து விட்டது. அதனால் 22ம் தேதி மீண்டும் ஒரு பிரிமீயர் காட்சியை நடத்த உள்ளார்கள். அதற்கான முன்பதிவை தற்போது ஆரம்பித்துள்ளார்கள். இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவலை அவர்களது டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.
'கபாலி' படத்திற்கான அமெரிக்காவில் நடக்க உள்ள பிரிமீயர் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் அங்கு புதிய சாதனையை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது பிரான்ஸில் உள்ள ரெக்ஸ் சினிமாஸ் திரையரங்கில் ஒரு புதிய சாதனையை 'கபாலி' படம் ஏற்படுத்தியுள்ளது. அங்கு முதன் முதலாகத் திரையிடப்படும் ஒரு தமிழ்த் திரைப்படம் 'கபாலி' என்பது குறிப்பிடத்தக்கது.
'கபாலி' படத்திற்கு உலகம் முழுவதுமே அபரிமிதமான வரவேற்பு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.