தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'திருநாள்' என அற்புதமான பெயரை வைத்து விட்டு, படம் முடிந்து சில மாதங்களாகியும் சரியான நல்ல நாள் கிடைக்காமல் படத்தைத் தள்ளிக் கொண்டே வந்தார்கள். ஜீவா இதற்கு முன் நடித்து வெளிவந்த 'போக்கிரி ராஜா' படமும் மிகப் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியதால் இந்தப் படம் வெளிவருவதற்கு மறைமுகமான சிக்கலையும் ஏற்படுத்தியது. இருந்தாலும் அனைத்தையும் சரிப்படுத்தி தற்போது படத்தை ஆகஸ்ட் 5ம் தேதி வெளியிட நாள் குறித்திருக்கிறார்கள்.
ஜீவா ஜோடியாக நீ....ண்ட இடைவெளிக்குப் பிறகு நயன்தாரா நடித்துள்ள இந்தப் படம் கும்பகோணம் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள ஒரு படம். கருணாஸ் நாயகனாக நடித்த 'அம்பாசமுத்திரம் அம்பானி' படத்தை இயக்கிய ராம்நாத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார், ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். 'கபாலி' படம் வெளிவந்த பின் அடுத்து வரும் கொஞ்சம் பெரிய படமாக 'திருநாள்' படம்தான் இருக்கும். இந்தத் 'திருநாள்' வெளியாகும் நாள் தனக்குத் திருப்புமுனையான நாளாக இருக்கும் என ஜீவா அதிக எதிர்பார்ப்பில் உள்ளார்.