ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
“கொலவெறி” பாடல் வாயிலாக உலகப்புகழ் பெற்ற நடிகர் தனுஷ் தற்போது தமிழில் முன்னணி நடிகராக உயர்ந்து விட்டார். மாரி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரபு சாலமனின் தொடரி படத்தில் நடித்துள்ள தனுஷ் அப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றார். மேலும் வெற்றிமாறனின் வடசென்னை கௌதம் மேனனின் என்னை நோக்கி பாயும் தோட்ட போன்ற படங்களிலும் பிசியாக இருக்கும் தனுஷ் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் பாடல் பாடியுள்ளார்.
இயக்குனர் சுனில் ரெட்டி இயக்கத்தில் சாய் தரண் தேஜ், மன்னாரா சோப்ரா, லரிஷா உள்ளிட்ட பலர் நடிக்கும் திக்கா படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கின்றார். திக்கா படத்தில் இடம்பெறும் திக்கா பேபி எனும் பாடலை தனுஷ் பாடியுள்ளார். திக்கா திரைப்படம் ஆகஸ்ட் 13ல் திரைக்கு வரவுள்ளது. மேலும் இப்படத்தின் டீசர் நாளை திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 30ல் திக்கா படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.