ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
1980 முதல் 1990 வரையிலான காலகட்டம் ரஜினி, கமலின் பொற்காலம். இருவரின் படங்களும் போட்டிபோட்டு வெளிவரும், பெல்பாட்டம் அணிந்த ரஜினி ரசிகர்களும், கமல் ரசிகர்களும் வெறிகொண்டு திரிவார்கள். ரஜினி ரசிகர்கள் தலையை கோதிவிட்டுக் கொண்டு திரிவார்கள். கமல் ரசிகர்கள் ஹிப்பி வைத்துக் கொண்டு அலைவார்கள். கட்அவுட்கள் உயரும், விசில் பறக்கும், பட்டாசு வெடிக்கும். இப்படியொரு காலகட்ட பின்னணியில் உருவாகும் படம்தான் எங்கிட்ட மோதாதே.
நட்டி, ரஜினி மன்றத் தலைவர், மூடர்கூடம் நவீன் கமல் மன்றத் தலைவர் இவர்களுடன் சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் நடிக்கிறார்கள். ராமு செல்லப்பா இயக்குகிறார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார், நடராஜன் சங்கரன் இசை அமைக்கிறார். 1980களில் உருவாகியிருந்த கட்-அவுட் கலாச்சாரம்தான் கதைகளம். அதன் பின்னணியில் உள்ள ரசிகர்களின் கதையாக காமெடி தளத்தில் உருவாகி வருகிறது படம்.