ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
10 வருடத்துக்கும் மேலாக சினிமாவில் போராடிக் கொண்டிருப்பவர் ஜெய் ஆகாஷ். அகத்தியன் இயக்கிய 'ராமகிருஷ்ணா' படத்தில் அறிமுமானார். அதன் பிறகு ரோஜாகூட்டம், ஆனந்தம் ஆரம்பம், காதலுக்கு கண்ணில்லை, நான் யார், குருபிரம்மா உள்பட பல படங்களில் நடித்தார். அவரே படம் தயாரிப்பார், இயக்குவார், நடிப்பார். ஆனால் எதுவுமே அவருக்கு கைகொடுப்பதில்லை.
இந்த நிலையில் அவர் தமிழ், தெலுங்கு மொழியில் தயாராகி வரும் 'அமாவாசை' என்ற படத்தில் நடித்து வருகிறார், நுபுர் மேத்தா, சாக்ஷி, ப்ரீத்தி சிங், தன்யா மவுரியா, முமைத்தான், கோட்டா சீனிவாசராவ், ஷோகன் ஆகியோர் நடித்துள்ளார்கள். சையத் அஹமத் இசை அமைத்துள்ளார். ராகேஷ் சமந்த் இயக்கி உள்ளார். உதய்பூர், ஜோத்பூர், இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
“இது பேய் படம் என்றாலும் இசைக்கு முக்கியத்தும் உள்ள படம். இசை எப்படி பேயாக முடியும் என்பதுதான் சஸ்பென்ஸ். பேய் திகில் படங்களில் இது வித்தியாசமாக இருக்கும்” என்கிறார் இயக்குனர் ராகேஷ் சமந்த்.