ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கபாலி திரைப்படம் ஜூலை 22ல் திரைக்கு வரவுள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள கபாலி படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கபாலி படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கபாலி திரைக்கு வருவதற்கு முன்னரே பல சாதனைகளை புரிந்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலி படத்தின் சாதனைகளை கபாலி திரைப்படம் முறியடித்துள்ளது.
1. யூடியூபில் பதிவேற்றப்பட்ட பாகுபலி படத்தின் டிரைலரை ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். ஆனால் கபாலி படத்தின் டீசரை இரண்டு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
2. இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படம், உலகம் முழுவதும் 4000க்கும் அதிகமான திரையரங்குகளில் 2015 ஜூலை 10ல் திரைக்கு வந்தது. ஆனால் கபாலி திரைப்படம் உலகம் முழுவதும் 5000க்கும் அதிகமான திரையரங்குகளில் திரைக்கு வரவுள்ளது.
3. பாகுபலி திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, என பல மொழிகளில் வெளிவந்தது. தற்போது சீன மொழியில் ஜூலை 22ல் பாகுபலி திரைக்கு வரவுள்ளது. ஆனால் கபாலி திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், மலாய் போன்ற மொழிகளில் வெளிவரவுள்ளது. மேலும் சைனீஸ், தாய், ஜாப்னீஸ், இந்தோனேசிய மொழிகளிலும் கபாலி டப்பிங் நடைபெற்று வருகின்றது.
4. பாகுபலி படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் ரூ 162 கோடியை எட்டியதாக கூறப்பட்டது. கபாலி படத்தின் விநியோக உரிமைகளின் விற்பனை ரூ200 கோடியைக் கடந்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
5. பாகுபலி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி, வானொலி, சமூக வலைதளங்கள் வாயிலாக நடைபெற்றது. மேலும் படக்குழுவினர் சென்னை, ஐதராபாத், பெங்களூர், மும்பை, கேரளா என சுற்று பயணம் மேற்கொண்டு மக்களிடம் பாகுபலி படத்தினைக் கொண்டு சேர்த்தனர். இந்தியாவில் முதன் முறையாக விமானத்தில் போஸ்டர் ஒட்டி பிரபலப்படுத்தப்பட்டது கபாலி படத்திற்காக தான். மேலும் கபாலி படத்தின் முதல் காட்சிக்காக பெங்களூரிலிருந்து, சென்னைக்கு சிறப்பு விமானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.