டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கத்திலான்டோடு, பாலகிருஷ்ணாவின் 100வது திரைப்படமான கௌதமிபுத்ர சாதர்கனி போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து வருகின்றார் தேவிஸ்ரீ பிரசாத். ஜூனியர் என்.டி.ஆர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கும் ஜனதா கேரேஜ் படத்திற்கும் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.
ஜூனியர் என்.டி.ஆரின் நாணாகு ப்ரேமதோ படத்திற்கு ஹிட் பாடல்களைக் கொடுத்த தேவிஸ்ரீ பிரசாத், அடுத்ததாக அவர் நடிக்கும் ஜனதா கேரேஜ் படத்திற்கும் இசையமைக்கின்றார். மேலும் ஜனதா கேரேஜ் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் புதிய படத்திற்கும் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். நாணாகு ப்ரேமதோ, ஜனதா கேரேஜ் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜூனியர் என்.டி.அருடன் தேவி ஸ்ரீ பிரசாத் இணைகின்றார்..