Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'இருமுகன்' இனிதே முடிந்தது...!

19 ஜூலை, 2016 - 10:59 IST
எழுத்தின் அளவு:
Irumugan-shooting-completed

'இருமுகன்' படம் ஆரம்பமாகும் போது விக்ரம் - நயன்தாரா ஜோடி என்றதும் தமிழ்த் திரையுலகமே ஆச்சரியத்தில் பார்த்தது. விக்ரமும் அதற்கு முன் தனது பல படங்களில் நயன்தாராவுடன் ஜோடி சேர ஆசைப்பட்டார். ஆனால், நயன்தாரா அப்போதெல்லாம் சம்மதிக்கவேயில்லை. எப்படியோ 'இருமுகன்' படத்தில் நடிக்க சம்மதித்தார். இப்போது விக்ரம் - நயன்தாரா ஜோடி பொருத்தமாக இருக்கிறது என்று 'இருமுகன்' படத்தின் போஸ்டர்களைப் பார்த்து அனைவரும் பொறாமைப்பட்டு வருகிறார்கள்.


எப்படியோ எந்தப் பிரச்சனையும் இல்லாமல் படமும் நல்லபடியாக இனிதே முடிவடைந்துவிட்டது. அடுத்து இறுதிக் கட்டப் பணிகள் பரபரப்பாக ஆரம்பமாக உள்ளன. விரைவில் படத்தின் இசை வெளியீடும், டிரைலர் வெளியீடும் நடக்க உள்ளது. விக்ரம், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருக்கு இந்தப் படம் திருப்புமுனையான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


விக்ரம் இரு வேடங்களில் நடிக்கிறார், ஒரு விக்ரமுக்கு மட்டும் நயன்தாரா ஜோடி என்பது மட்டுமே இந்தப் படம் பற்றி இதுவரை வெளிவந்த தகவலாக உள்ளது. இயக்குனர் ஆனந்த் சங்கர் அனைவரையும் ஆனந்தப்பட வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in