ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
விஷ்ணுவுக்கு நடித்த முதல் படமான வெண்ணிலா கபடிக்குழுவே ஹிட்டாக அமைந்தபோதும், அதன்பிறகு அவர் நடித்த பலே பாண்டியா, துரோகி, குள்ளநரிக்கூட்டம் உள்பட பல படங்கள் தோல்வியாக அமைந்தன. ஆனால் அதன்பிறகு நடித்த முண்டாசுப்பட்டி வெற்றி பெற்றதோடு, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்களும் வெற்றிப்படங்கள் வரிசையில் இடம்பிடித்தன. தற்போது சுசீந்திரன் இயக்கும் சரித்திர படமான மாவீரன் கிட்டு படத்திலும் அவர் நடிக்கிறார்.
மேலும், ஆரம்ப காலத்தில் பத்திரிகை பேட்டிகளில் ஆர்வம் காட்டி வந்த விஷ்ணு, சமீபகாலமாக பேட்டிகளில் ஆர்வம் காட்டுவதில்லை. படங்கள் ஓடினால் பப்ளிசிட்டி தானாக கிடைக்கும் என்கிறார். அதோடு, இதுவரை பிறந்தநாள் விழாக்களை போஸ்டர் அடித்து பெரிய அளவில் கொண்டாடாத அவர், கடந்த ஜூலை 17-ந்தேதி தனது பிறந்த நாளையொட்டி சென்னை நகரமெங்கும் மெகா போஸ்டர் ஒட்டி பரபரப்பு கூட்டியுள்ளார்.