Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நவம்பர் 18 சல்மான் கானுக்கு திருமணமா?

18 ஜூலை, 2016 - 16:08 IST
எழுத்தின் அளவு:
What-Salman-Khan-said-about-his-marriage

பாலிவுட்டின் முன்னணி நடிகரும், அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பாக பேசப்படும் நடிகர் சல்மான் கானின் திருமணம் எப்போது என அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நேற்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சுயசரிதை புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட சல்மான்கானிடம் அவரது திருமணம் பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு விளையாட்டாக பதிலளித்த அவர், நவம்பர் 18ம் தேதி எனது திருமணம். ஆனால் எந்த ஆண்டு என்று எனக்கு தெரியாது. நிறைய பெண்கள் எனக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். நிறைய பேர் என நான் கூறுவது எனது தாய் மற்றும் சகோதரிகளை என்றார். நவம்பர் 18 ம் தேதி சல்மான் கானின் பெற்றோர் சலீம் - சல்மா கான் மற்றும் சகோதரி அர்பிதா - ஆயுஷ் ஆகியோரின் திருமண நாள். இதனால் சல்மான் கான் தனது திருமணம் பற்றி பேச விரும்பவில்லை என கூறப்பட்டாலும், எதையோ மனதில் வைத்து தான் சல்மான் தனது திருமணம் பற்றி சூசகமாக இவ்வாறு பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in