இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரேடான் மீடியா சார்பில் ராதிகா சரத்குமார் தயாரித்து ஒளிபரப்பும் நெடுந்தொடரான 'தாமரை' 500 எபிசோட்களை கடந்துள்ளது. ராதிகாவின் கதைக்கு பிரசன்னா வசனம் எழுதியுள்ளார், தேவிபாலா திரைக்கதை அமைத்துள்ளார். எம்.கே.அருந்தவராஜா, குருவிதுரை, கே.எல்.தங்கபாண்டியன், ஏ.ராமச்சந்திரன் ஆகியோர் இயக்கி வருகிறார்கள்.
நீலிமா ராணி, நிரோஷா, அஸ்வின், சலிதா, எல்.ராஜா, வரதராஜன் உள்பட பலர் நடித்து வருகிறார்கள். 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஒளிபரப்பை தொடங்கிய இந்த தொடரின் 514வது எபிசோட் கடந்த 16ந் தேதி ஒளிபரப்பானது. ராதிகாவின் தொடர்கள் அனைத்துமே 500 எபிசோட்களை கடந்துவிடும். அதுபோல 'தாமரை'யும் கடந்துள்ளது. நடுத்தர மக்களின் பொருளாதார பிரச்சினை, உறவுகள், பாசப்போராட்டம் போன்றவை கதை களமாக இருப்பதால் பெண்களிடம் 'தாமரை'க்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.