அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நடிகை கரீனா கபூரின் கர்ப்பம் பற்றி பல வதந்திகள் பரவின. அவற்றை கரீனா அதனை மறுத்து வந்தார். ஆனால், கரீனாவும் தானும் டிசம்பர் மாதம் பிறக்க உள்ள தங்களின்முதல் குழந்தைக்காக காத்திருப்பதாக நடிகரும் கரீனாவின் கணவருமான சைப் அலிகான் கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில் கர்ப்பமாக இருப்பது பற்றி கரீனாவிடம் கேட்கப்பட்டது. அப்போது கோபமடைந்த கரீனா, ஆமாம் நான் கர்ப்பமாக உள்ளேன். நான் ஒன்றும் சவம் இல்லை. தாமதமாக தாய்மை அடைவதில் என்ன இருக்கிறது? ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொள்வது உலகில் சாதாரணமாக நடக்கும்ஒன்று. இதனை மீடியாக்கள் பெரிதாக்கி விட்டன. என்னை வித்தியாசமாக பார்ப்பதை நிறுத்துங்கள். நானும் எல்லோரை போல் தான். என்னை பற்றி கவலைபடும் யாரும் என்னுடன் இருக்க போவதில்லை. எப்போதும் போல் என் வேலை நடந்து கொண்டு தான் இருக்கும். நான் கர்ப்பமாக இருப்பதை தேசிய பேரிடர் போல் காட்டுவதை நிறுத்துங்கள்.
நாம் 2106 ல் இருக்கிறோம், 1800 களில் இல்லை. சொல்லப் போனால், அந்த காலத்தில் மக்கள் மிகவும் நாகரீகமாகவும், இயல்பாகவும் இருந்தனர். ஆனால் இப்போது மீடியாக்கள் யோசிக்காமல் நடந்து கொள்கின்றன என்றார்.