தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படம் ஜுலை 22ம் தேதி வெளிவருவதை முன்னிட்டு பல திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டுவிட்டது. தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளத்தில் கூட பல படங்களை தள்ளி வைத்துவிட்டார்கள். ஜுலை 22ம் தேதியும், ஜுலை 29ம் தேதியும் தமிழில் வேறு படங்கள் வெளியாக அதிக வாய்ப்பில்லை. 'கபாலி' படம் அமோக வரவேற்பைப் பெற்றால் ஆகஸ்ட் 5ம் தேதி கூட புதிய படங்கள் வெளியாவது சந்தேகம்தான். 'ப்ரீ - புக்கிங்' முறையில் பல தியேட்டர்களில் ஒரு வார காலத்திற்கு 'கபாலி' படம் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. இன்று காலையில் முன்பதிவை ஆரம்பித்த மற்ற தியேட்டர்களிலும் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பொதுவாக பலரிடமும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில்தான் படங்களைப் பார்க்கும் வழக்கம் உள்ளது. 'கபாலி' படத்திற்கான டிக்கெட் முன்பதிவு 23, 24, 30, 31 ஆகிய வார இறுதி நாட்களில் உடனுக்குடன் முன்பதிவு செய்யப்பட்டுவிடும். அதனால் 6, 7ம் தேதிக்குதான் டிக்கெட்டுகள் ஓரளவிற்குக் கிடைக்க வாய்ப்பிருக்கும். அதனால், ஆகஸ்ட் 12ம் தேதிதான் புதிய படங்கள் வெளியாக வாய்ப்பிருக்கம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அப்போது தனுஷ் நடித்துள்ள 'தொடரி', விக்ரம் பிரபு நடித்துள்ள 'வாகா', பிரபுதேவா, தமன்னா நடித்துள்ள 'தேவி', த்ரிஷா நடித்துள்ள 'நாயகி', மற்றும் 'ஜோக்கர்', 'பண்டிகை' ஆகிய படங்கள் வெளிவர வாய்ப்புள்ளது.