தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் இஞ்சி இடுப்பழகி என்ற பெயரில் வெளிவந்த திரைப்படம் தெலுங்கில் சைஸ் ஜூரோ என திரைக்கு வந்தது. அனுஷ்கா முதன்மை வேடமேற்று நடித்த இப்படத்தில் ஆர்யா நாயகனாக நடித்திருந்தார். இப்படத்திற்காக தனது உடல் எடையைக் கூட்டி குண்டான தோற்றத்துடன் அனுஷ்கா நடித்திருந்தார். ஆனால் அப்படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் உடற்பயிற்சிகள் மற்றும் யோகா மூலம் உடல் எடையை குறைக்க துவங்கினார் அனுஷ்கா.
ஆனால் முன் போல் மெலிந்த தேகத்தை அனுஷ்காவால் பெறமுடியவில்லை. இதனால் மிகுந்த கவலையில் இருப்பது அனுஷ்கா மட்டுமல்ல இயக்குனர் ராஜமௌலியும் தான். பாகுபலி எனும் பிரம்மாண்ட வெற்றிப் படம் கொடுத்த இயக்குனர் ராஜமௌலி தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகின்றார். இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா தேவசேனா எனும் ராணியாக நடிக்கின்றார்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் இக்கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்த அனுஷ்கா தற்போது குண்டாகி விட்டார். இதனால் அனுஷ்காவை உடல் எடையைக் குறைக்கு மாறு ராஜமௌலி கூறியுள்ளாராம். அதிலும் படப்பிடிப்புகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதால் உடற்பயிற்சி பலனிக்கவில்லை எனில் அறுவைசிகிச்சை மேற்கொள்மாறு ராஜமௌலி அனுஷ்காவை கடிந்துகொண்டதா டோலிவுட் தகவல்கள் கூறுகின்றன.