நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
டோலிவுடின் பிரபல தயாரிப்பாளரின் மகன் பெல்லம்கொண்ட சாய் ஸ்ரீநிவாஸ் நாயகனாக அறிமுகமான அல்லுடு சீனு படத்தில் தமன்னா நாயகியாக நடிப்பதாகக் கூறப்பட்டது. இறுதியில் சமந்தா நாயகியாக மாற்றப்பட்டார். இருப்பினும் தமன்னா அல்லுடு சீனு படத்தில் குத்தாட்டம் போட்டார். அதே போல் அப்படத்திற்கு பின்னர் சாய் ஸ்ரீநிவாஸ் சோனாரிகாவுடன் இணைந்து நடித்த ஸ்பீடுனோடு படத்திலும் தமன்னா ஒரு பாடலுக்கு நடனமாடினார்.
படம் தோல்வியைத் தழுவிய போதிலும் தமன்னாவின் குத்தாட்டப்பாடல் பெரும் வெற்றி பெற்றது. இதனால் சாய் ஸ்ரீநிவாஸ் நடிப்பில் இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கும் ஆக்ஷன் படத்திலும் தமன்னா குத்தாட்டம் போட ஒப்பந்தமாகியுள்ளாராம். தமிழ் ஹிந்தி என பல படங்களில் பிசியாக இருப்பினும் கணிச்சமான தொகை ஒரு பாடலுக்கே கிடைப்பதால் குத்தாட்ட வாய்ப்புகளை தமன்னா தவறாமல் ஏற்கொள்கின்றார்