ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படம் ஜூலை 22-ந்தேதி திரைக்கு வருவது தெரிந்ததே. இந்நிலையில், இதுவரை எந்த தமிழ்ப்படங்க ளுக்கும் இல்லாத வகையில், அப்படத்திற்கான பப்ளிசிட்டிகளை முடுக்கி விட்டிருக்கிறார் தயாரிப்பாளர் எஸ்.தாணு. மேலும், இதுவரை இந்தியப்படங்களே வெளியாகாத பல வெளிநாடுகளில் இந்த படம் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாவதால் கபாலி படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
மேலும், தமிழ் ரசிகர்களுக்கு இணையாக மலேசியா, சீன மொழி ரசிகர்களும் ரஜினி படங்களை அதிகமாக ரசித்துப்பார்ப்பதால், இந்த படத்தை சீன, மலாய் மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகிறார்கள். அதோடு, கபாலி தமிழ்ப்பதிப்பில் முக்கிய வில்லனாக கிஷோர் நடிப்பது போன்று சீன, மலாய் மொழி வில்லன் களும் நடித்துள்ளனர். அந்த வகையில் இப்படத்தின் தமிழ்ப்பதிப்பில் சீன, மலாய் மொழி வில்லன்களுடன் சீன, மலாய் மொழி பேசியே நடித்துள்ளாராம் ரஜினி. அதேபோல் டப்பிங் பேசும்போது அந்த மொழி வசனங்களை பேச பயிற்சி எடுத்து தனக்குத்தானே டப்பிங் பேசியுள்ளார் ரஜினி.