இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் பெரும்பாலும் தங்களது படங்களில் ஆடியோ விழாக்களில்தான் தலைகாட்டுவார்கள். ஆனால், விஜயசேதுபதி தனக்கு முன்னபின்ன அறிமுகமே இல்லாதவர்கள் ஆடியோ விழாவுக்கு அழைத்தால்கூட, படப்பிடிப்பை முடித்து விட்டு வந்து கலந்து கொண்டு வாழ்த்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் தமிழ், கன்னடத்தில் சுதீப்பை நாயகனாக வைத்து இயக்கியுள்ள முடிஞ்சா இவனை புடி படத்தின் ஆடியோ விழா ஜூலை 20-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஆடியோவை வெளியிடுகிறார்களாம். மேலும், தனுஷின் தங்கமகன், சிவ கார்த்திகேயனின் ரெமோ படங்களில் கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருப்பதால் அவரது அழைப்பை ஏற்று வருகை தருகிறார்களாம். அதேபோல், விஜயசேதுபதியின் றெக்க படத்திலும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார் கே.எஸ். ரவிக்குமார்.