ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2013-ல் கன்னடத்தில் வெளியான லூசியா என்ற படத்தை இயக்கியவர் பவன்குமார். அதன்பிறகு அவர் இயக்கிய படம் யு-டர்ன். இந்த படத்தில் லீடு ரோலில் நடித்தவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தற்போது மணிரத்னம் கார்த்தியை வைத்து இயக்கும் காற்று வெளியிடை -படத்தில் நடிக்கிறார். காற்று வெளியிடை படத்தின் ஆடிசனுக்கு சென்றபோது அவரை ஓகே செய்த மணிரத்னம், சில மாதங்களாக காத்திருக்க சொன்னாராம். மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக காத்துக்கொண்டிருந்த ஸ்ரத்தா ஸ்ரீநாத், இப்போது அரிதாரம் பூச தயாராகிக்கொண்டிருக்கிறார்.
கதைப்படி, காற்று வெளியிடை படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடிப்பது அதிதி ராவ் ஹைதரிதானாம். ஸ்ரத்தாஸ்ரீநாத் ஒரு கேரக்டரில்தான் நடிக்கிறாராம். அதேசமயம் அந்த வேடத்துக்காக பத்து கிலோ வரை வெயிட் போட்டு நடிக் கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், யு-டர்ன் படத்தில் லீடு ரோலில் நடித்த நான் மணிரத்னம் படத்தில் சிறிய வேடத்தில்தான் நடிக்கிறேன். காரணம், அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. அது இப்போது நிறைவேறியிருக்கிறது. மேலும், நான் நடிப்பது கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம். அந்த வகையில், காற்று வெளியிடை படம் திரைக்கு வரும்போது எனது நடிப்பும் பேசப்படும் என்கிறார் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.