இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சுந்தரபாண்டியன், கும்கி, பாண்டியநாடு, குட்டிப்புலி, ஜிகர்தண்டா, மஞ்சப்பை, கொம்பன் என பல படங்களில் கிராமத்து வேடங்களில் நடித்தவர் லட்சுமிமேனன். அப்படி நடித்த ஒவ்வொரு படங்களிலுமே அந்த வேடங்களுக்கு அச்சு அசலாக அவர் பொருந்தியும் இருந்தார். அந்த வகையில், கிராமத்து கதைகள் என்றாலே கூப்பிடு லட்சுமிமேனனை என்றாகிவிட்டது. தற்போது அவர் விஜய சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கிராமத்து பெண்ணாகவே நடித்துள்ளார்.
கிராமத்து வேடங்களில் நடிப்பது பற்றி லட்சுமிமேனன் கூறுகையில், பெரும்பாலும் நான் படப்பிடிப்புகளுக்கு வெளியூர்களில் உள்ள கிராமங்களுக்கே செல்வதால், அங்கு வேடிக்கை பார்க்க வரும் பெண்களிடம் சகஜமாக பழகுவேன். அப்போது அந்த பெண்கள் பேசுவது, பழகுவது, அவர்களின் பாடி லாங்குவேஜ் என ஒவ்வொன்றையும் கவனித்து அதை தனது நடிப்பில் பிரதிபலித்த வருகிறேன். அதனால் என்னை கவர்ந்த நடிகைகள் பலர் இருந்தாலும், கிராமத்து படங்களைப் பொறுத்தவரை எனது ரோல் மாடல் கிராமத்து பெண்கள்தான். அந்தவகையில் நான் பார்த்த பழகிய பெண்களை மனதில் கொண்டுதான் சில காட்சிகளில் என்னை முழுமையாக மாற்றி நடிக்கிறேன் என்கிறார் லட்சுமிமேனன்.