அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. 'சின்னசாமி' என்ற இயற்பெயர் கொண்ட பாரதிராஜா , 1941 ஆம் ஆண்டு ஜூலை 17 ம் தேதி தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் படம் இயக்கிய இவர் மண்வாசனை, கிழக்கே போகும் ரயில், முதல் மரியாதை உள்ளிட்ட ஏராளமான கிராமத்து படங்களை இயக்கி, தமிழ் சினிமாவில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் பாரதி ராஜா.
சுமார் 40 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய பாரதிராஜா சில படங்களில் நடித்தும் உள்ளார். பல முன்னணி நடிகர், நடிகைகளை திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இவர் இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். பாரதிராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து, பாரதி ராஜாவின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து கூறினார். பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறியதுடன், விலையுயர்ந்த ஐபோன் ஒன்றையும் பாரதி ராஜாவுக்கு பரிசாக கொடுத்துள்ளார்.