தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் கமலஹாசன் இரண்டு தினங்களுக்கு முன் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததில் காயமடைந்தார். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு காலிலும், முதுகு தண்டுவட பகுதியிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக கமலுக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தான் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் நடந்து வந்து அனைவருக்கும் நன்றி தெரிவிப்பேன் என கமல் நேற்று வாட்ஸ்ஆப் மூலம் தகவல் அனுப்பி இருந்தார். நடிகர் கமலஹாசன் காயமடைந்திருப்பது பற்றி சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களிடம் நடிகர் சிவக்குமார் பேசினார். அப்போது கூறிய அவர், கமல் ஒரு போர் வீரன். அவருக்கு இப்போது ஏற்பட்டிருப்பது விழுப்புண் மட்டுமே. இதிலிருந்து அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார். அதற்காக எனது வாழ்த்துக்களை கூறி கொள்கிறேன் என்றார்.