'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
'குற்றம் கடிதல்' படத்தில் யதார்த்தமான டீச்சராக நடித்து புகழ்பெற்ற ராதிகா பிரஷிதா. அடுத்து விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கடுகு' படத்திலும் பள்ளி டீச்சராகத்தான் நடிக்கிறார். இரண்டும் டீச்சர் கேரக்டர் என்பதால் வித்தியாசம் வேண்டும் என்பதற்காக உடல் எடையை அதிகரித்து நடித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
'குற்றம் கடிதல்' படம் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தாலும் அடுத்த படம் வாய்ப்பு கிடைக்கும் என்றெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. திடீரென்று விஜய்மில்டன் சார் போன் பண்ணி “கடுகு படத்தில் டீச்சர் ரோல் பண்றீங்களா. ராஜகுமாரன் ஜோடி” என்றார். ராஜகுமாரன் ஜோடி என்பதெல்லாம் எனக்கு பிரச்சினை இல்லை. அடுத்த படத்திலும் டீச்சரா என்றுதான் யோசித்தேன். “கொஞ்சம் வெயிட் போட்டால் வித்தியாசம் காட்டலாம்” என்று அவரே ஆலோசனை சொன்னார். அதன்படி நிறைய சாப்பிட்டு வெயிட் போட்டேன். ஷ¨ட்டிங் போகிற வரையில் என்ன கதை என்றுகூட அவரிடம் கேட்கவில்லை. அந்த அளவிற்கு விஜய் மில்டன் சார் மீது நம்பிக்கை இருந்தது.
படப்பிடிப்பில் பார்த்தவர்கள் குற்றம் கடிதலில் பார்த்த ராதிகா மாதிரியே இல்லை என்றார்கள் அப்போதே என் கேரக்டர் மீது எனக்கு முழு நம்பிக்கை வந்தது. எனது கேரக்டருக்கு படத்தில் பெரிய முக்கியத்தும் இருக்கிறது. படம் வெளிவரும்வரை அதுபற்றி நிறைய பேசமுடியாது. என்கிறார் ராதிகா.