பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அமிதாப் பச்சன், அக்ஷைகுமார், அர்ஜூன் ராம்பால், சுஷ்மிதா சென் ஆகியோர் நடித்து வெளிவந்த படம் ஆன்கின். இப்படத்தின் அடுத்த பாகத்தை ஆன்கின் 2 என்ற பெயரில் இயக்க டைரக்டர் அனீஸ் பாஸ்மீ திட்டமிட்டுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. ஆனால் இதுவரை இப்படத்திற்காக எந்த நடிகரையும் தயாரிப்பாளர்கள் இதுவரை தேர்வு செய்யவில்லையாம். சமீபத்தில் இப்படத்திற்காக நடிகர் இர்பான் கானிடம் படத் தயாரிப்பாளர்கள் பேசி உள்ளனர். ஆனால் கால்சீட் பிரச்னை காரணமாக ஆன்கின் 2 பட வாய்ப்பை இர்பான் கான் நிராகரித்து விட்டாராம். இதற்கு முன் இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் ஜான் ஆப்ரகாம் மற்றும் கத்ரீனா கைப்பிடம் பேசப்பட்டதாம். ஆனால் இருவரும் இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டதாலேயே, பட தயாரிப்பாளர்கள் இர்பான் கானை அனுகினார்களாம். ஆன்கின் 2 படத்தில் நடிப்பதற்கு தற்போது வரை அமிதாப் பச்சன் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.